தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஹீரோயின் ஆன முதல் படத்திலேயே‌ முத்தக் காட்சி.. ரசிகர்கள் ஷாக்! - yennai arindhal

நடிகை அனிகா சுரேந்திரன் ’ஓ மை டார்லிங்’ என்னும் மலையாள படத்தில் முத்தக் காட்சியில் நடித்துள்ளது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கதாநாயகியாக முதல் படத்திலேயே‌ முத்தக் காட்சி… ரசிகர்கள் அதிர்ச்சி
கதாநாயகியாக முதல் படத்திலேயே‌ முத்தக் காட்சி… ரசிகர்கள் அதிர்ச்சி

By

Published : Feb 11, 2023, 1:01 PM IST

சென்னை: மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அந்த படத்தில் அனிகாவின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிவா இயக்கிய விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக நடித்தார் அனிகா. இந்த படமும் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றது. இப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடித்த அனிகா நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் குவிந்தது. சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்திலும் அனிகா நடித்திருந்தார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் இவரை வசைபாடி பதிவிட்டு வந்தனர். இளம் வயதிலேயே இதுபோன்று கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்துப் பதிவிடுவதாகக் கூறி வந்தனர்.

அனிகாவுக்கு தற்போது 18 வயது நிரம்பியதால் ஹீரோயின் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் முதல் முதலாக மலையாளத்தில் ’ஓ மை டார்லிங்’ என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இதன் ட்ரைலர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதாநாயகியாக முதல் படத்திலேயே‌ முத்தக் காட்சி… ரசிகர்கள் அதிர்ச்சி

காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே அவரது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வந்தவர் தற்போது நாயகி ஆனதும் முத்தக் காட்சிகளில் நடித்துள்ளார் என்று கிசிகிசுக்கப்படுகிறது. முதல் படத்திலேயே இதுபோன்ற முத்தக் காட்சிகளில் அனிகா நடித்துள்ளது குறித்து நெட்டிசன்கள் நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'கட்டுப்பாடாக இருந்திருக்க வேண்டும்' - விஜய் சேதுபதிக்கு உச்ச நீதிமன்றம் அட்வைஸ்!

ABOUT THE AUTHOR

...view details