தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

காதலனை கரம் பிடித்த அமலா பால்… வைரலாகும் திருமண புகைப்படங்கள்! - tamil cinema news

Amala paul weds jagat desai: நடிகை அமலா பாலுக்கும் அவரது காதலன் ஜகத் தேசாய்க்கும் இன்று கொச்சியில் திருமணம் நடைபெற்றது.

காதலனை கரம் பிடித்த அமலா பால்
காதலனை கரம் பிடித்த அமலா பால்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 8:20 PM IST

சென்னை: நடிகை அமலாபால் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் அமலா பால் நடித்த மைனா திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். குறிப்பாக தனுஷுடன் இணைந்து நடித்த வேலையில்லா பட்டதாரி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அமலா பாலுக்கும் இயக்குநர், ஏ.எல்.விஜய்க்கும் தலைவா படத்தின் போது காதல் ஏற்பட்டுக் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கடந்த 2017ஆம்‌ ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகள் தற்காலிகமாக நடிப்பதை நிறுத்தியிருந்த அமலா பால், ஆடை படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இவரது நடிப்பில் கடைசியாகக் கடாவர் என்ற படம் ஓடிடியில் வெளியாகி இருந்தது. இவர் ஏற்கனவே ஒரு பாடகரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் செய்திகள் வெளியானது. இந்நிலையில் அமலா பால் கடந்த மாதம் தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அமலா பாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பார்ட்டியில் அவரது நண்பர் ஜகத் தேசாய் என்பவர் அவரிடம் புரொபோஸ் செய்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ வைரலானது. அவரது காதலை அமலாபால் ஏற்றுக் கொண்டதையடுத்து விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில் அமலா பாலுக்கும் அவரது காதலரான ஜகத் தேசாய்க்கும் கொச்சியில் இன்று திருமணம் நடைபெற்றது. அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். இருவருக்கும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜகத் தேசாய் டூரிஸம் பிசினஸ் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினி, விஜய்க்கு தேவைப்படும் போது எனக்கு தேவைப்படாதா? - இயக்குநர் அமீர் கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details