தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கதையின் நாயகியாக இவர் நடித்த படங்கள் வாரம் ஒன்று வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் 'ஃபர்ஹானா' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அவர் இஸ்லாமிய பெண்ணாக நடித்திருந்தார். ஆனால், இப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டது. இதனால், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷனுக்கு தெலுங்கு மீடியா ஒன்றிற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், புஷ்பா படம் குறித்தும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு குறித்தும் பேசியுள்ளார். ஆனால், அது மீடியாக்களில் ராஷ்மிகாவை விட நான் அந்த வேடத்திற்கு பொருத்தமாக இருப்பேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அன்பிற்குரிய நண்பர்களே
நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் மீதும், என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.