சென்னை: நடிகர் சதீஷ், தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர். இவர் தமிழின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ‘நாய் சேகர்’ என்ற படத்தின் மூலம் முதன் முதலில் கதாநாயகனாக களம் இறங்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து, தற்போது இவர் மீண்டும் கதாநாயகனாக வித்தைக்காரன் என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து, தற்போது வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், படத்தின் முதல் சிங்கிள் “லைஃப் இஸ் மேஜிக்” பாடலை, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து வெளியிட்டுள்ளனர்.
White Carpet Films சார்பில், K.விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைக் குவித்த நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிளான “லைஃப் இஸ் மேஜிக்” பாடல் வெளியாகி உள்ளது.