தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜயகாந்துக்கு நேரில் வாழ்த்துக்கூறிய நடிகர் சங்கப்பொருளாளர் கார்த்தி! - விஜயகாந்த் பிறந்த நாள் வாழ்த்து

நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்திற்கு நேரில் சென்று சங்கத்தின் பொருளாளரான நடிகர் கார்த்தி வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.

விஜயகாந்துக்கு நேரில் வாழ்த்து கூறிய நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி...!
விஜயகாந்துக்கு நேரில் வாழ்த்து கூறிய நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி...!

By

Published : Aug 25, 2022, 4:09 PM IST

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயகாந்தின் 70ஆவது பிறந்த நாளான இன்று(ஆக.25) நடிகர் சங்கம் சார்பில், பொருளாளர் கார்த்தி நேரில் சென்று மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துத்தெரிவித்தார். இவருடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஹேமச்சந்திரன் ஆகியோர் இருந்தார்கள்.

நடிகர் விஜயகாந்தைப் பற்றி நடிகர் கார்த்தி கூறியதாவது, ”விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவருடைய தைரியம் தான். அதேபோல், யார் வந்தாலும் சாப்பிடலாம் என்று சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டிருக்கேன்.

யாரிடமும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் அன்பு காட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். இப்படி ஒரு மனிதரை அவருடைய பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவது தான் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். அதிலும் சங்கம் சார்பாக வந்து வாழ்த்தியது நிறைவாக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details