தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'சூட்டிங்கு... பேக்-அப்... ரிப்பீட்டு...!' : வெற்றிமாறனின் தொடர் ரீ-சூட்டால் அல்லாடும் நடிகர்கள் - விடுதலை ரிலீஸ்

இயக்குநர் வெற்றிமாறனின் தொடர் ரீ-சூட்டால் நடிகர்கள் அல்லாடிக்கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

’ சூட்டிங்கு.., பேக்-அப்பு..,ரிபீட்டு...!’ : வெற்றிமாறனின் தொடர் ரீசூட்டால் அல்லாடும் நடிகர்கள்
’ சூட்டிங்கு.., பேக்-அப்பு..,ரிபீட்டு...!’ : வெற்றிமாறனின் தொடர் ரீசூட்டால் அல்லாடும் நடிகர்கள்

By

Published : Jun 17, 2022, 8:35 PM IST

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி இணைந்து நடித்து உருவாகியுள்ள திரைப்படம் தான் 'விடுதலை'. இந்தத் திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'விடுதலை' எனும் சிறுகதையை மையமாக வைத்து எடுத்திருக்கும் திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே.

ஏறத்தாழ பல நாட்களாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. எடுத்த காட்சிகளை முழு நேர்த்திகுறைவின்றி எடுத்துவிட வேண்டுமென்பதற்காக மீண்டும், மீண்டும் எடுக்கிறாராம், வெற்றி மாறன். அப்படி ஜவ்வு மிட்டாயாக இழுத்து வந்த 'விடுதலை' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.

ஒரு வழியாக ’விடுதலை’யிலிருந்து விடுதலையான சூரி, விஜய்சேதுபதியின் பெருமூச்சு அவர்களின் மூக்கைத் தாண்டுவதற்குள் மீண்டும் ஓர் ரீசூட் செட்யூளுக்காக கால்சீட் கேட்டுள்ளாராம், வெற்றிமாறன்.

வெற்றிமாறன் தயாரிப்பில் 'அறம்' பட இயக்குநர் கோபி நயினார் ஒரு புதிய படத்தை எடுத்துக்கொண்டு வருகிறார். அந்த திரைப்படத்தளத்துக்கு சென்ற வெற்றிமாறன், அங்குவைத்து 'விடுதலை' பட எடிட்டிங் வேலையை மேற்கொள்ளும்போது, இன்னும் சில மாற்றங்கள் செய்யலாம் என தோன்றியுள்ளது.

அதனையடுத்து சூரி மற்றும் விஜய்சேதுபதியிடம் மேற்கொண்டு 25 நாள்கள் கால்சீட் கேட்க, திகைத்த நடிகர்கள் பின் வேறு வழியின்றி தர ஒப்புக்கொண்டுள்ளார்களாம்.

இதையும் படிங்க: இயக்குநர்கள் தலையில் இடியை இறக்கும் விஜய் சேதுபதி!

ABOUT THE AUTHOR

...view details