நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை இனியா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு "தூக்கு துரை" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அட்வெஞ்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். "தூக்குதுரை" திரைப்படம் PRE (Period-Royal-Entertainer) ஜானர் வகையைச் சேர்ந்தது என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 19ஆம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 என மூன்று விதமான காலகட்டங்களில் படத்தின் கதை நகர்வதாக படக்குழு தெரிவிக்கப்பட்டுள்ளது.