சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனையொட்டி நேற்று இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவானது சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். நடிகை லிஸி பேசியபோது,”12 வருட சினிமாவில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். ஆனால் இந்த படத்தில் தான் முதன்முறையாக மேடையில் நின்றுள்ளேன்” என்று கண் கலங்கினார்.
நடிகர் விஷ்ணு விஷால் பேசியபோது,”நான் இங்கு நிற்பதற்குக் காரணம் பத்திரிக்கையாளர்கள் தான். என்னிடம் என் அப்பா சொன்னது இதுதான். அவர் ஒரு காவல் துறையைச் சார்ந்தவர், அவருக்கு உறுதுணையாக இருப்பது பத்திரிக்கையாளர்கள் தான் என்றார். அதனால் என்னையும் எப்போதும் பத்திரிக்கையாளர்களிடம் நட்பை வைத்திருக்கச் சொல்வார். எல்லா விதமான கருத்துக்களையும் வரவேற்கிறேன்.