தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஷால் பிறந்தநாள் கொண்டாட்டம்..கருவறை குறும்பட இயக்குநரை பாராட்டிய இளையராஜா.. திரைப்பிரபலங்கள் ஓணம் வாழ்த்து உள்ளிட்ட சினிமா செய்திகள்! - கருமேகங்கள் கலைகின்றன

cinema sitharalgal: நடிகர் கவின் பட அறிவிப்பு, விஷால் பிறந்தநாள், திரைப்பிரபலங்களில் ஓணம் வாழ்த்து உள்ளிட்ட கோலிவுட் சினிமா செய்திகள் சிலவற்றை சினிமா சிதறல்கள் தொகுப்பில் பார்க்கலாம்..

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 3:40 PM IST

கவின் நடிக்கும் ஸ்டார்:ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்தத் திரைப்படத்தை 'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி படத்தை இயக்கிய இளன் இயக்கி வருகிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக இணைகிறார்கள்.

மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று ‘ஸ்டார்’ படத்திலிருந்து ப்ரோமோ வெளியாகிறது.

46வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஷால்:விஷால் நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்கத்திலும் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது நடிப்பில் வரும் 15ஆம் தேதி மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ரசிகர் விஷாலின் ரசிகர் மன்றத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் ஹரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி விஷால் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

கருவறை குறும்பட இயக்குநரை பாராட்டிய இளையராஜா:இ.வி.கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இசையமைப்பாளர் இளையராஜா கருவறை குறும்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபுவை அழைத்து பாராட்டியுள்ளார். இவர் இயக்கி நடித்துள்ள ’கட்டில்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

கருவறை படத்தின் இயக்குநருக்கு தமிழ்நாடு முதலமைச்சர், தெலங்கானா ஆளுநர், திரையுலகின் முக்கிய ஆளுமைகள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். முக்கிய ஒடிடி தளத்தில் விரைவில் ரிலீஸ் ஆகும் கருவறை முழுமையாக வேறு எந்த தளத்திலும் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பார்வையாளர்களின் பாராட்டு பெற்ற கருமேகங்கள் கலைகின்றன:தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. பாரதிராஜா, யோகி பாபு, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை பார்த்த பார்வையாளர்கள் படக்குழுவை பாராட்டியுள்ளனர்.‌ மேலும் பத்திரிகையாளர் காட்சியிலும் இப்படம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. படம் வெளியான பிறகு மேலும் பாராட்டுகளை பெறும் என்று தங்கர் பச்சான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திரை பிரபலங்கள் ஓணம் வாழ்த்து:மலையாள மொழி பேசும் மக்கள் இன்று ஓணம் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய் சார்பில் புஸ்ஸி ஆனந்த் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, மோகன் லால், சிவாங்கி, மடோனா செபாஸ்டியன், இயக்குனர் மோகன் ஜி, பாடகி சித்ரா உள்ளிட்டோரும் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details