தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விக்ரமுக்கு என்ன சிகிச்சை? மருத்துவமனை அளித்த விளக்கம் - actor vikram age

நடிகர் விக்ரம் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமுக்கு மாரடைப்பா? மருத்துவமனை அளித்த விளக்கம்
விக்ரமுக்கு மாரடைப்பா? மருத்துவமனை அளித்த விளக்கம்

By

Published : Jul 8, 2022, 3:33 PM IST

Updated : Jul 8, 2022, 6:57 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவரது நடிப்பில் கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் 57 வயதாகும் விக்ரமுக்கு நேற்று (ஜூலை 7) இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இன்று (ஜூலை 8) காலை முதல் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவ தொடங்கின.

இந்நிலையில் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில் விக்ரம் லேசான நெஞ்சு வலி காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை, சிகிச்சை முடிந்துவிட்டது விரைவில் டிஸ்சார்ச் செய்யப்படுவார், என தெரிவித்துள்ளது.

இதேபோல் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது தந்தைக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். தற்போது நலமாக உள்ளார் இன்னும் ஒரு நாளில் அவர் டிஸ்சார்ச் செய்யப்படுவார். அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை சியான் நலமாகவுள்ளார். தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்.” என விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க:பொன்னியின் செல்வன் அப்டேட்: அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி!

Last Updated : Jul 8, 2022, 6:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details