தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவரது நடிப்பில் கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் 57 வயதாகும் விக்ரமுக்கு நேற்று முன்தினம் (ஜூலை 7) இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் விக்ரம் லேசான நெஞ்சு வலி காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை, சிகிச்சை முடிந்து விரைவில் டிஸ்சார்ச் செய்யப்படுவார் எனவும் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து இன்று (ஜூலை 9) மதியம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். நாளை ஒரு நாள் ஓய்வு எடுத்துவிட்டு நாளை மறுதினம் நடைபெறும் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்க உள்ளார்.
இதையும் படிங்க:நித்தியானந்தாவை திருமணம் செய்ய ஆசை - பிரியா ஆனந்த் பளிச்