தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சேது படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவு.. சீயானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் விக்ரம் ..! - இயக்குநர் பாலா

Happy Birthday Chiyaan: சேது திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், “இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சீயான்” என சீயானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நடிகர் விக்ரம் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

24 years of sethu movie
சேது படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 11:01 PM IST

சென்னை: பொதுவாகத் திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கப்பட்டாலும், சில திரைப்படங்கள் காலங்களைக் கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அப்படி காலத்தால் அழிக்க முடியாத தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றுதான் 'சேது'.

அறிமுக இயக்குநர் பாலா இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான இப்படம் 1999ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் நடிப்பு மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில், சேது திரைப்படம் வெளியாகி இன்றுடன் (டிச.10) 24 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத இடத்தை பெற்றுள்ள இப்படத்தில், சிவகுமார், அபிதா, ஸ்ரீமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் காதல் கதையாக இருந்தாலும், அதில் சில உண்மை சம்பவத்தைச் சேர்த்து இயக்கியிருந்தார், இயக்குநர் பாலா. இதன் கிளைமாக்ஸ் காட்சி பார்வையாளர்களை அதிர வைக்கும் வகையில் அமைந்தது. மேலும், விக்ரம் என்ற தலைசிறந்த நடிகரை தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டியதும் இப்படமே.

இளையராஜா இசையில் அமைந்த இப்படத்தின் பாடல்கள், மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. மேலும், இன்றளவும் இப்படத்தின் பாடல்களுக்குத் தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றது. விக்ரமுக்கு சீயான் என்ற பெயரைக் கொடுத்த இந்த சேது படம், விக்ரமின் திரைப்பட வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சீயான் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நெருக்கமாக ஒட்டிக்கொள்ள, நடிகர் விக்ரம் பெயருக்கு முன்னாள் சீயான் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளியான இப்படத்திற்கு, வெளியான சமயத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், பின்னர் ரசிகர்களின் வாய்வழி சொல் மூலம் பரவி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இயக்குநர் பாலா மற்றும் நடிகர் விக்ரம் இருவருக்கும் இப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில், படம் வெளியான இந்நாளில் தான் சீயான் உருவாகினார் என்பதைக் குறிக்கும் வகையில், 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீயான்' என நடிகர் விக்ரம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், சேது படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவு செய்ததை நடிகர் விக்ரம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை சமந்தா! திடீர் தயாரிப்பாளர் அவதாரம் - என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details