தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மீண்டும் ஒர் தெலுங்கு படத்தில் நடிக்கிறாரா விஜய்..? - தளபதி 68

நடிகர் விஜய் மீண்டும் ஓர் தெலுங்கு படத்தில் நடிக்கவிருப்பதாக திரையுலக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மீண்டும் ஒர் தெலுங்கு படத்தில் நடிக்கிறாரா விஜய்..?
மீண்டும் ஒர் தெலுங்கு படத்தில் நடிக்கிறாரா விஜய்..?

By

Published : Oct 18, 2022, 12:00 PM IST

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ’வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் 2023 பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை மைதிரி மூவி மேக்கர் தயாரிக்க உள்ளதாகவும் இயக்குநர் அட்லி இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அட்லி‌ தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். விஜய் ’வாரிசு’ படத்தை முடித்து விட்டார். இதனை தொடர்ந்து இரண்டு மாதங்கள் குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா செல்ல உள்ளார். அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் வெளிவர உள்ளது.

இதனைத் தொடர்ந்து மற்றுமொரு தெலுங்கு படத்தில் நடிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். அதுவும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் அதிக சம்பளம் கிடைப்பதாலும் தெலுங்கில் தனது மார்க்கெட்டை அதிகப்படுத்தும் நோக்கத்தில் விஜய் இந்த திட்டத்தை யோசித்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ’சர்தார் வேறு திரைப்படம், பிரின்ஸ் வேறு மாதிரியான திரைப்படம் ‘ - சிவகார்த்திகேயன்

ABOUT THE AUTHOR

...view details