தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உங்க ஆர்டர் ரெடி சுவைக்க தயாராகுங்க.. 'லியோ' டிரைலர் குறித்து படக்குழு வெளியிட்ட அப்டேட்! - thalapathy vijay movies

Leo Trailer: நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் டிரைலர் வரும் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 6:13 PM IST

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல திரைத்துறை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாகப் பாடலில் இடம் பெற்று இருந்த விரிகள் விவாத பொருளாகவும் மாறியது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அன்று, 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென தயாரிப்பு நிறுவனம் இசை வெளியீட்டு விழாவைப் பாதுகாப்பு கருதி ரத்து செய்ததாக அறிவித்தது. இது நடிகர் விஜயின் குட்டி கதையை கேட்க எதிர்பார்ப்போடு இருந்த அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

மேலும் 'லியோ' திரைப்படம் எந்த வித பிரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் இல்லாமல், அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இருந்தனர். இந்நிலையில் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'லியோ' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில், "தாங்கள் ஆர்டர் செய்தது தயாராகிக் கொண்டுள்ளது, அதை ருசிக்கத் தயாராக இருங்கள், உங்கள் டெலிவரி பார்ட்னர் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ அக்டோபர் 5 அன்று டெலிவரி செய்வார்" என்று குறிப்பிட்டு, படத்தின் மிரட்டலான போஸ்டர் ஒன்றுடன் வெளியிட்டுள்ளது. இந்த பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: Leo Movie: பதானை மிஞ்சிய லியோ.. வெளிநாடுகளில் தெறிக்கவிடும் டிக்கெட் விற்பனை.! வரலாற்று சாதனை!

ABOUT THE AUTHOR

...view details