தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவான வாரிசு படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஓசூர் லட்சுமி தேவி திரையரங்கில் 17 நாட்களைத் தாண்டியும் ஹவுஸ்புல் காட்சிகளாக வாரிசு ஓடிக்கொண்டு இருக்கிறது. புதுச்சேரி பிவிஆர் திரையரங்கில் மற்ற திரைப்படங்களை விட இரு மடங்கு அதிகமான காட்சிகள் வாரிசு படத்திற்காகத் திரையிடப்பட்டு வருகின்றன.
திருச்சி மரியம் திரையரங்கில் இதுவரை விக்ரம் படத்திற்குத் தான் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை (footfall) தந்தனர் என்கிற சாதனை இருந்து வந்தது. அதை வாரிசு திரைப்படம் முறியடித்து தற்போது அதிகப்படியான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.