நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு 'வாரிசு' என தலைப்பு வைத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளான இன்று 'வாரிசு' திரைப்படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
'வாரிசு' திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, சங்கீதா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப பிண்ணனி கொண்ட திரைக்கதையில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.