சென்னை:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான திரைப்படம் லியோ. இப்படம் வெளியாகி 12 நாட்களில் ரூபாய் 540 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இப்படத்தின் வெற்றி விழா, நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால், இதன் வெற்றி விழாவை பிரமாண்டமாக கொண்டாடினர்.
விஜய்யின் குட்டிக்கதைக்காக காத்திருந்த அவரது ரசிகர்கள், இப்படத்தின் வெற்றி விழாவால் உற்சாகமடைந்தனர். விழாவில் நடிகர் விஜய்யின் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சில் அரசியல் தென்பட்டது. இவ்விழாவில் நடிகர் விஜய், காக்கா, கழுகு கதைக்கு ஒரு குட்டி கதை சொன்னார். நடிகர் விஜய்யின் பேச்சில் அரசியல் தென்பட்டது. மேலும் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கும், தனது தெளிவான பேச்சின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.
விஜயின் குட்டி ஸ்டோரி: தனது மக்கள் இயக்கத்தை எதிர்காலத்தில் எப்படி கட்டமைக்க போகிறார் என்பதும் அவரது பேச்சில் அழுத்தமாக தெரிந்தது. இது ஒருபுறம் இருக்க உதயநிதி குறித்து அவர் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது. விழாவில் உதயநிதி குறித்து அவர் பேசியதாவது, "வீட்டுல ஒரு குட்டிப் பையன் தன் அப்பாவோட சட்டையை எடுத்துப் போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான்.
அப்பாவோட சேர்ல ஏறி உட்காந்துக்குவான். அந்த சட்டை அவனுக்கு செட்டே ஆகாது தொள தொளன்னு இருக்கும். வாட்ச் கையிலேயே நிக்காது. அந்த சேர்ல உக்காரலாமா? வேணாமா? தகுதி இருக்கா? இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அது அவன் அப்பா சட்டை. அப்பா மாதிரி ஆக வேண்டும் என்பது கனவு. இதுல என்ன தவறு இருக்கு. நீ பெருசா கனவு காண் நண்பா” என்று கூறியிருந்தார்.