நடிகர் விஜய் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று(நவ.20) சந்தித்தார். சென்னை பனையூரில் உள்ள அவரது மக்கள் மன்ற அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சேலம், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதனால் இன்று காலை முதலே பனையூர் அலுவலகம் மற்றும் விஜயின் நீலாங்கரை வீடு ஆகிய இடங்களில் ரசிகர்கள் பெருந்திரளாக கூடினர். ஆனால், இந்தச் சந்திப்பிற்கு மக்கள் மன்ற அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
காலை 11 மணிக்கு விஜய் வருவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் வரவில்லை. பின்னர் அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் விஜய் வந்தார். சுமார் 400க்கும் மேற்பட்டோர் அவரிடம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.
பின், விஜய் மக்கள் மன்ற பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று(நவ.20) சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.