ஹைதராபாத்:இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடிப்பதற்காக சில நாட்களாக நடிகர் விஜய் ஹைதராபாத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில், திடீரென மரியாதை நிமித்தமாக இன்று(மே 18) தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! - நடிகர் விஜய்
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை நடிகர் விஜய் இன்று(மே 18) மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
மேலும், இந்தச் சந்திப்பின் போது விஜயுடன் ‘தளபதி 66’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி ஆகியோர் உடன் இருந்துள்ளனர். முன்னதாக, ஓராண்டிற்கு முன் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினை நடிகர் விஜய், தற்போது வரை மரியாதை நிமித்தமாக சென்று சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’ரியல் லெஜெண்ட் எண்ட்ரீ’ : பிரம்மாண்டமாக நடைபெறும் லெஜண்ட் இசை வெளியீட்டு விழா!