ஹைதராபாத்: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி ஆகியோர் நடித்திருந்தனர்.
மாஸ்டர் படத்திற்குப் பிறகு லோகேஷ் விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரீலீஸ் வரை ஏராளமான சர்ச்சைகளைச் சந்தித்தது. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான history of violence என்கிற ஆங்கில படத்தின் தழுவலான லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய், பார்த்திபன் என்கிற கதாபாத்திரத்தில் பேக்கரி தொழில் செய்பவராக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு லோகேஷ் உடன் இணைந்து ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. லியோ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.
பிரபல சினிமா வர்த்தக நிறுவனம் சாக்னில்க் அறிக்கையின் படி, முதல் வாரம் லியோ திரைப்படம் இந்திய அளவில் ரூ. 265.83 கோடி வசூல் செய்துள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது வாரத்தில் 9ஆம் நாளில் லியோ பட வசூலில் சரிவைச் சந்தித்துள்ளது. சாக்னில்க் அறிக்கையின் படி, இந்தியா பாக்ஸ் ஆபிஸில் 9ஆம் நாளில் 9 கோடி வரை மட்டுமே லியோ திரைப்படம் வசூல் செய்துள்ளது. மொத்தமாக 9ஆம் நாள் முடிவில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் 274.83 கோடி வரை வசூல் செய்துள்ளது. லியோ திரைப்பட வசூல் 300 கோடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: “கதாநாயகிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது” - நடிகை ரேகா வருத்தம்