சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கிட்டத்தட்ட தமிழ் சினிமா மார்க்கெட்டில் முதல் இடத்தில் உள்ளார் என்றே சொல்லலாம். இவரை வைத்து படம் தயாரிக்க பல முன்னணி தயாரிப்பாளர்களும் ரெடியாக உள்ளனர். இவரது ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் திருவிழா தான் அவருடைய ரசிகர்களுக்கு.
இப்படி ரசிகர் படையைக் கொண்ட இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்த ''மாஸ்டர்'' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் லியோ படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தில் த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சஞ்சய் தத் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதனால் இப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. இதுவும் லோகேஷ் கனகராஜ் ''சினிமாட்டிக் யுனிவர்சில்'' இணையுமா என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் தற்போது விஜய் ஆக்டிவாக உள்ளார். ஏற்கனவே, ட்விட்டர் பக்கத்தில் உள்ள இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த ஒரே நாளில் அவரை 40 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர். ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது தனது படம் குறித்த தகவல்களை விஜய் பகிர்ந்து வந்துள்ளார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளதால் இதிலும் அதே போன்று தனது படம் குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரே ஒரு புகைப்படம் மட்டும்தான் பகிர்ந்துள்ளார். இதுவே ஏராளமான ரசிகர்களை போய் சேர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் லியோ படம் குறித்த முக்கிய படங்கள் மற்றும் அப்டேட்ஸ்கள் இதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இளையராஜா ஹீரோவை அருகில் வைத்து டியூன் போடுவது இதான் முதல்முறை - நடிகர் சூரி பேச்சு!