தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர், நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது.
இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் உள்ளம் கேட்குமே, 12பி, இயற்கை போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் ஷாம் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அந்த பேட்டியில் விஜய் பற்றி பேசிய விஷயம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. அதில் “நான் திடீரென்று ஹீரோவானேன். அதன் பிறகு ஒரு நாள் விஜய்யை பார்க்கும்போது, அவர் ‘வரும்போதே இரண்டு குதிரைகளுடன் வர்ற, யாருடா நீ’ என்றார்” என்று பேசினார். 12பி படத்தில் ஜோதிகா மற்றும் சிம்ரன் இருவரும் நடித்திருந்தனர்.
திரைப்பட நாயகிகளை விஜய் குதிரை என்று அழைப்பதா? என சமூக வலைதளங்களில் இந்த விஷயம் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே சமீப காலமாக நடிகர் விஜயை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் உலாவி வரும் நிலையில், இதுவும் மற்றொரு பிரச்னையாக அவருக்கு உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க:ஜிகர்தண்டா 2: ஹீரோவாக ராகவா லாரன்ஸ்?