சென்னை: 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளை கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகர் விஜய் சந்தித்தார். சென்னை பனையூரில் உள்ள அவரது மக்கள் மன்ற அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சேலம், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இன்று(டிச.13) மீண்டும் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்துள்ளார். அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை இன்று(டிச.13) பனையூர் அலுவலகத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தச் சந்திப்பிற்கு மக்கள் மன்ற அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.