நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கோலோச்சி வருகிறார். இன்றைய தேதிகளில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பு மட்டுமின்றி கிரிக்கெட் விளையாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். படப்பிடிப்பு தளங்களில் கிடைக்கும் இடைவெளிகளில் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடுவார். இவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் கூட பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் இன்று கையில் கிரிக்கெட் பேட்டுடன் இருக்கும் போட்டோவைப் பதிவிட்டு, ”இந்த பேட்டை சர்ப்ரைஸா எனக்கு பரிசளித்த விஜய் அண்ணாவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். யோகி பாபு விஜயுடன் மெர்சல், பிகில் உள்ளிட்டப் படங்களில் இணைந்து நடித்துள்ளார். தற்போது வாரிசு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திரையரங்கில் வெளியான 'சில்லா சில்லா' பாடல்; ரசிகர்கள் கொண்டாட்டம்