தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மெமரீஸ் பட செய்தியாளர் சந்திப்பில் கோபப்பட்ட நடிகர் வெற்றி - Actress Parvathi Arun images

இயக்குனர்கள் ஷ்யாம் - பிரவீன் இருவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெமரீஸ்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில், நடிகர் வெற்றி பத்திரிகையாளர்கள் மத்தியில் கோபம் அடைந்தார்.

‘மெமரீஸ்’ செய்தியாளர் சந்திப்பில் கோபப்பட்ட நடிகர் வெற்றி!
‘மெமரீஸ்’ செய்தியாளர் சந்திப்பில் கோபப்பட்ட நடிகர் வெற்றி!

By

Published : Mar 4, 2023, 6:13 PM IST

சென்னை:திரைப்பட நடிகர் வெற்றி, ‘8 தோட்டாக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்பின் அவரது நடிப்பில் ஜீவி, ஜோதி, கேர் ஆஃப் காதல், வனம் மற்றும் ஜீவி 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களிடம் தனி கவனத்தைப் பெற்றது. இப்போது இவர் ஷ்யாம் - பிரவீன் என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் ‘மெமரீஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

‘மெமரீஸ்’ செய்தியாளர் சந்திப்பில் கோபப்பட்ட நடிகர் வெற்றி!

இந்த இரட்டை இயக்குனர்கள் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளனர். இந்த திரைப்படத்தில் வெற்றி உடன் பார்வதி அருண் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர், முன்னதாக சசிகுமார் நடிப்பில் வெளியான ‘காரி’ படத்தில் நடித்திருந்தார். இந்த மெமரீஸ் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (மார்ச் 4) சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் வெற்றி, பார்வதி அருண் மற்றும் எழுத்தாளர் அஜயன் பாலா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்திற்கு அஜயன் பாலா தமிழ் வசனம் எழுதியுள்ளார். இதில் பேசிய நடிகை பார்வதி அருண், “இந்த படத்தில்தான் முதலில் தமிழில் நடிக்க ஒப்பந்தமானேன். ஆனால் காரி படம் முதலில் ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தின் அதிகப்படியான காட்சிகள் காட்டுப் பகுதிக்குள் எடுக்கப்பட்டன” என்றார்.

இதனையடுத்து பேசிய நடிகர் வெற்றி, “இந்த படம் நான் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கேட்டது. இத்தனை நாட்கள் எனக்காக இவர்கள் காத்துக் கொண்டிருந்து, தற்போது இதனை எடுத்துள்ளனர். இந்த படம் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையாக இருக்கும் என்று என்னிடம் கூறினார்கள். அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது.

படம் தொடங்கிய நேரத்தில் ஊரடங்கு போட்டு விட்டார்கள். காட்டுக்குள்தான் நிறைய காட்சிகள் எடுத்தோம். மழை காட்சிகள் அதிகம் இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளோம். இந்த படத்தில் எனக்கு நான்கு கெட்டப் இருக்கிறது. எனது நடிப்பில் இப்படம் அடுத்த கட்டத்தில் இருக்கும் என்கின்றனர். அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து படத்திலும் ஒரே மாதிரி நடிக்கிறீர்களே என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய வெற்றி, “நான் முறையாக நடிப்பு பயிற்சி எடுத்துள்ளேன். ஒரே மாதிரி நடிக்கிறேன் என்றால், அது அவரவர் பார்வை. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. கேர் ஆஃப் காதல் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தேன்.

ஆனால் அந்த படத்தை யாரும் பார்க்கவில்லை. இனி வேறு மாதிரி நடிக்க முயற்சிக்கிறேன். ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் மன்னிக்கவும்” என கூறினார். முன்னதாக செய்தியாளர்கள் எழுப்பிய இந்த கேள்விக்கு சற்று கோபமடைந்த வெற்றி, பின்னர் சுதாரித்துக் கொண்டு இனி வரும் படங்களில் முயற்சி செய்வதாக பதில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நேஷனல் க்ரஷ் 'ராஷ்மிகா மந்தனா' புகைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details