அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தமிழகம் முழுவதும் வெளியிட்டது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.100 கோடி வசூலை பெற்றது. ஒரு அறிமுக இயக்குனரின் முதல் படமே 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்ற சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் "டான் படத்தை நாங்கள் தான் வாங்கி வெளியிட்டிருந்தோம். படம் வெளியாவதற்கு 20 நாட்களுக்கு முன்பே எனது வீட்டில் சில நண்பர்களுடன் படம் பார்த்தேன். யாருக்குமே சிரிப்பு வரவில்லை. காமெடியே இல்லை.