நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’விக்ரம்’. இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'விக்ரம்' மாஸ் அப்டேட்..!: கமலுடன் இணைந்த சூர்யா - நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் 'விக்ரம்' திரைப்படத்தில் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப்படத்தின் சிங்கிள் பாடல் நேற்று(மே 11) இரவு வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அந்தப்படத்தின் மற்றொரு மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வேடத்தில் அமிதாப் பச்சன் முதலில் நடிப்பதாக ஒப்புக் கொண்டார் என்றும் தற்போது அந்த காட்சிகளில்தான் சூர்யா நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், கமல் மற்றும் சூர்யா இணைந்து இருப்பது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரஜினியை மறந்த தனுஷ் - அப்செட்டில் ரஜினி ரசிகர்கள் !