தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் நடிக்கும் சூர்யா..?! - Rajan Pillai

நடிகர் சூர்யா நடித்த பயோபிக் படமான சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Actor Surya is again in a biopic movie
மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் நடிக்கும் சூர்யா

By

Published : Feb 28, 2023, 3:54 PM IST

சென்னை: நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம்‌ முப்பரிமாண தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் திஷா பதானி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார்.

இந்த நிலையில் தற்போது சூர்யா மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த பயோபிக் திரைப்படம் சூரரைப் போற்று. இது ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். நேரடியாக ஓடிடியில் வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சூர்யா மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் நடிக்க உள்ளார் எனக்கூறப்படுகிறது. பிரிட்டானியா பிஸ்கட், ராஜன் பிள்ளை வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை மலையாள நடிகர் மற்றும் இயக்குநருமான பிரித்விராஜ் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ராஜன் பிள்ளை வேடத்தில் பிரித்விராஜ் நடிப்பதாகவும் சூர்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பிரித்விராஜ் குடும்பத்தை சந்தித்துள்ளனர். இதனை பிரித்விராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் சூர்யா இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். இது ஒருபுறம் இருக்க இதனை பிரித்விராஜ் இணையத் தொடராக இயக்க உள்ளதாக முன்னர் அறிவித்து இருந்தார். தற்போது திரைப்படமாக எடுக்கப்போகிறார் என்றும் பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலதிபர் ராஜன் பிள்ளை பிஸ்கட் கிங் என்று அழைக்கப்பட்டவர். மோசடி வழக்கில் கைதான இவர் 1995-ம் ஆண்டு திகார் சிறையில் காவலில் இருக்கும்போது உயிரிழந்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details