நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டு உள்ளது. இன்று (ஜூலை. 23) நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு கங்குவா படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகி வரும் படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடத்து வருகின்றனர்.
கங்குவா படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளை நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியிட்டது.
இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் மாலை 5 மணிக்கு வெளியாகும் என பட நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது. இதையடுத்து படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.