தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கங்குவா படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் சூர்யா..! - chennai news

Actor Suriya: கங்குவா படத்திற்கான தனது படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டதாக நடிகர் சூர்யா தன்னுடைய 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Actor Suriya
நடிகர் சூர்யா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 9:22 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் மிகப் பெரிய பட்ஜெட் படமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயத்தில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தைத் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு உள்ளது.

சூர்யாவின் 42வது படமாக உருவாகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் நடித்துள்ளனர். கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்து வருகிறார். 3டி தொழில் நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார். இந்த படம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் பேட்ச் ஒர்க் பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில், தற்போது படத்தின் வில்லன் பாபி தியோல் உடன் சூர்யா மோதும் காட்சிகளின் பேட்ச் ஒர்க் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படக்குழுவினார், படத்தில் உள்ள சூர்யாவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (ஜன.10) கங்குவா படத்திற்கான தனது படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டதாக நடிகர் சூர்யா தன்னுடைய 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இத்துடன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடங்க உள்ளது என்றும் அனைத்துப் பணிகளையும் முடித்து படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நயன்தாரா மீது மும்பையில் வழக்குப்பதிவா? - உண்மை நிலவரம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details