தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கிராமத்து காமெடியில் களமிறங்கும் யோகி பாபு.. "காவல்துறை உங்கள் நண்பன்" கதாநாயகனுடன் கூட்டணி! - tamil cinema news

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன், ராஜபாண்டியன் இணைந்து தயாரித்து சுரேஷ் ரவி, யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் படபிடிப்பு துவங்கியது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 1:25 PM IST

சென்னை: BR Talkies Corporation தயாரிப்பில், கடந்த 2020ஆம் ஆண்டு நடிகர் சுரேஷ் ரவி நடித்து வெளியான திரைப்படம் "காவல்துறை உங்கள் நண்பன்". இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சக ரீதியாக தரமான திரைப்படமென பெரும் பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் தற்போது இதே தயாரிப்பு நிறுவனமும், நடிகர் சுரேஷ் ரவியும் இரண்டாவது படத்தில் இணைந்து உள்ளனர்.

சுரேஷ் ரவி

இப்படத்தை BR Talkies Corporation தயாரிக்கின்றனர். நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் இப்படம் கிராமத்து பின்னணி கொண்ட காமெடி டிராமா கதையாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் பூஜை கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்போதைக்கு Production No.2 என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்து காட்டும் வகையில், சுரேஷ் ரவி, யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் கலக்கலான காமெடி டிராமாவாக இப்படம் உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.

இப்படத்தினை இயக்குநர் K பாலையா எழுதி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ள நிலையில், தொடர்ந்து தேனி, கொடைக்கானல் மதுரை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தீபா பாலு, பிரிஜிடா சாகா, தேஜா வெங்கடேஷ் கருணாகரன், வேல ராமமூர்த்தி ஆதித்யா, கதிர் அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன், ராஜபாண்டியன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு N R ரகுநந்தன் இசையமைக்கிறார். தினேஷ் போனுராஜ் படத்தொகுப்பை கவனிக்க C S பாலச்சந்தர் கலை இயக்குனராக பணிபுரிகிறார். படம்‌ குறித்த மற்ற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மனோஜ் பாரதிராஜா படத்தில் மீண்டும் இணையும் பாரதிராஜா - இளையராஜா கூட்டணி!

ABOUT THE AUTHOR

...view details