சென்னை: தெலுங்கு திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சுனில். அதன்பின் குணசித்தர நடிகராக உருவெடுத்து ஹீரோவாகவும் நடித்தார். தற்போது வில்லனாக கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தில் மங்கலம் சீனுவாக மிரட்டியிருந்தார். இயக்குநர் ராஜமௌலி இயக்கிய மரியாதை ராமண்ணா படத்தில் கதை நாயகனாக கலக்கியிருந்தார்.
அப்படம் தமிழில் சந்தானம் நடிப்பில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது சுனிலுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.