நாற்பதுக்கும் மேற்பட்ட மலையாள படங்களை இயக்கியவர் அனில், இவர் 'சாயாவனம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக தடம் பதிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் சந்தோஷ் தாமோதரன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். போலி வர்கீஸ் இசையமைத்துள்ளார்.
சௌந்தரராஜாவின் வித்தியாசமான நடிப்பில் உருவான 'சாயாவனம்'! இதில், 'சுந்தரபாண்டியன்', 'தர்மதுரை', ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான சௌந்தரராஜா கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் இது. இப்படம் குறித்து இயக்குநர் அனில் கூறுகையில், "மலையாளத்தில் 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருந்தாலும் எனக்கு தமிழில் இயக்க வித்தியாசமான ஸ்கிரிப்ட் தேவைபட்டதால் காத்திருந்தேன்” என கூறினார்.
இப்படத்தின் தலைப்பு ‘அடர்ந்த காடு' என்று பொருள்படும். தேவானந்தா நடிக்கும் சீதை கதாபாத்திரத்தைச் சுற்றி இந்த கதை நகர்கிறது. கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொண்ட சௌந்தரராஜா, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டது.
இப்படம் மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக இயற்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் அப்புக்குட்டி, ஜானகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிங்க: விக்ராந்த், விதார்த் நடிக்கும் விடியும் வரை காத்திரு!