தூத்துக்குடி:தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நேற்று (பிப். 17) தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிலையில் இன்று (பிப்.18) உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன் - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்- வெளியான புகைப்படம்
மூலவர் சண்முகர், சத்ரு சம்ஹாரமூர்த்தி சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த அவரிடம் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆவலாக செல்வி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். அப்போது ரசிகர்கள் செல்பி எடுக்க ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:ஒரே பாடலில் 500 நடன கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த மாவீரன் படக்குழுவுக்கு பாராட்டு