இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’பீஸ்ட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், இப்படம் சில நாட்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியானது. பின்னர் சமூக வலைதளங்களில் படத்தின் லாஜிக் குறித்து நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் பயங்கரவாதிகளுள் ஒருவராக வரும் 'கம்மட்டிபாடம், குருதி, இஷ்க்' போன்ற பல மலையாள படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ, சமீபத்தில் ஒரு மலையாள யூ-ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், 'பீஸ்ட்' படத்தின் காட்சிகளில் லாஜிக் இல்லை எனக் கூறியுள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் அளித்திருந்த பேட்டியில் தொகுப்பாளர் பீஸ்ட் படத்தின் ட்ரோல்கள் குறித்து கேட்ட போது அவர், 'சாதாரணமாக ஒருவர் அதிக எடையை தூக்கினால், அந்த நபரின் முகத்தில் அதற்கான கஷ்டங்கள் தெரியும். ஆனால், பீஸ்ட் பட இறுதியில் விஜய் வில்லனை தூக்கிக்கொண்டு வரும்போது, அப்படி எதையும் முகத்தில் காட்டவில்லை.