தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம் : லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - தி கிரே மேன் ரிலீஸ் தேதி

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான ’ தி கிரே மேன்’ படத்தில் தனுஷின் லுக் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம் : லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம் : லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

By

Published : Apr 27, 2022, 4:58 PM IST

தமிழ் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம் என மாற்று மொழிப் படங்களிலும் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்தை இயக்கிய ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ ஆகியோரின் படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.1500 கோடியில் தயாரித்துள்ளது. ஆக்ஷன் திரைப்படமான இப்படத்திற்காக தனுஷ் அமெரிக்காவில் மூன்று மாதங்கள் தங்கி நடித்துகொடுத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் தனுஷின் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் வரும் ஜூலை 22ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சந்தானம் நடிக்கும் புதிய படம்!

ABOUT THE AUTHOR

...view details