தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வாரிசு, துணிவுடன் வரும் சாந்தனு! - வாரிசு துணிவு படத்துடன் ராவணக்கோட்டம் ட்ரெய்லர்

நடிகர் சாந்தனு நடித்துள்ள "இராவணக் கோட்டம்" படத்தின் ட்ரெய்லர், 'வாரிசு' மற்றும் 'துணிவு' படங்களுடன் நாளை திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

santhanu
santhanu

By

Published : Jan 10, 2023, 4:03 PM IST

சென்னை: இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், நடிகர் சாந்தனு "இராவண கோட்டம்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். பிரபு, இளவரசு, P.L. தேனப்பன், தீபா சங்கர், அருள்தாஸ் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று(ஜன.10) வெளியிடப்பட்டது. இப்படத்தின் ட்ரெய்லர், வாரிசு மற்றும் துணிவு படங்களுடன் நாளை திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இராவணக் கோட்டம் ஃபர்ஸ்ட் லுக்

இது தொடர்பாக தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசும்போது, "இராவணக் கோட்டம் படத்தின் ட்ரெய்லர், அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜயின் 'வாரிசு' படத்துடன் நாளை தமிழ்நாடு முழுவதும் 250 ஸ்கிரீன்களில் திரையிடப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவிக்க இருக்கிறோம். விக்ரம் சுகுமாரன், நடிகர் ஷாந்தனு பாக்யராஜ், நடிகை ஆனந்தி, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் மொத்த படக்குழுவின் ஆதரவிற்கும் நன்றி" என்று கூறினார்.

இதையும் படிங்க: நாளை வெளியாகும் வாரிசு, துணிவு.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details