தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த இரண்டு வருடமாக நெசப்பாக்கம் பகுதியில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி வந்திருக்கிறார். நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள தனியார் எடிட்டிங் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்த விருகம்பாக்கம் காவல்துறையினர் உடலை மீட்டு, பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது இறப்பிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இவர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ஷாந்தனு உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அந்த டிவிட்டர் பதிவில், “ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டேன். நல்ல திறமையுள்ள உதவி இயக்குநர். 26 வயது தான் ஆகிறது எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லை, ஆரோக்யாமான வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார், ஆனால் கடவுள் அவரை நிறையச் சீக்கிரமாக எடுத்துக்கொண்டார். பணிபுரியும் போது கீழே அப்படியே இறந்திருக்கிறார்.