ஹைதராபாத்:பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பல்வேறு வகையில் அச்சுறுத்தல் ஏற்படுவதால் மகாராஷ்டிரா அரசு அவருக்கு Y - plus பாதுகாப்புஅளிக்க உத்தரவிட்டுள்ளது. ஷாருக்கான் சமீபத்தில் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஷாருக்கானுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. ஷாருக்கானின் Y - plus பாதுகாப்பு படையில் 6 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும், 5 ஆயுதம் ஏந்திய காவலர்களும் உள்ளனர்.
கொலை மிரட்டல் போன்ற அதிகமான அச்சுறுத்தல் வரும் பிரபலங்களுக்கு Y - plus பாதுகாப்பு வழங்கப்படும். அந்த Y - plus பாதுகாப்பு படையில் 6 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும், 5 ஆயுதம் ஏந்திய காவலர்களும் மூன்று ஷிப்ட்களுக்கு சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவர். அந்த வகையில் ஏற்கனவே நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னாய் ரவுடி கும்பலால் ஏற்பட்ட அச்சுறுத்தலால் Y - plus பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமிதாப் பச்சன், அமீர் கான், அக்ஷய் குமார், அனுபம் கேர் ஆகியோருக்கு Y - plus பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், அமீர் கான், அக்ஷய் குமார், அனுபம் கேர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் மூன்று தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மூன்று ஷிப்ட்களுக்கு வாரத்தில் ஏழு நாட்களும் பணியில் இருப்பர். முன்னதாக ஷாருக்கானுக்கு பாதுகாப்பில் 2 காவலர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 11 காவலர்கள் அடங்கிய Y - plus பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.