தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'ஜிபி முத்து ஒரு ஆம்பளை சன்னி லியோன்' – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சதீஷ்! - ஜி பி முத்து ரசிகர்கள் கூட்டம்

’ஓ மை கோஸ்ட்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில், ஜி.பி.முத்து ஒரு ஆம்பளை சன்னி லியோன் என நடிகர் சதீஷ் பேசியுள்ளார்.

நடிகர் சதீஷ் மீண்டும் சர்ச்சை பேச்சு
நடிகர் சதீஷ் மீண்டும் சர்ச்சை பேச்சு

By

Published : Dec 29, 2022, 7:26 AM IST

Updated : Dec 29, 2022, 12:01 PM IST

சென்னை:நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ’ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோன், தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ் , ஜி.பி.முத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஜி.பி.முத்து, “இந்த படத்தில் தான் நான் முதன்முறையாக நடித்துள்ளேன். படத்தில் நான் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் நிறைய கிளுகிளுப்பான காட்சிகள் உள்ளது” என்றார்.

நடிகை தர்ஷா குப்தா பேசிய போது, “வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணிவிட வேண்டும் என்பது எனது கனவு, போன வருடம் ’ருத்ரதாண்டவம்’ படம் வந்தது, இந்த வருடம் ’ஓ மை கோஸ்ட்’ திரைப்படம் வர உள்ளது. படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. அனைவரும் படத்தைத் திரையரங்குகளில் சென்று பாருங்கள்” என்றார்.

பின்னர் நடிகர் சதீஷ் பேசிய போது, “இந்த படத்தில் சன்னி லியோன் மட்டுமே ஹீரோ, ஹீரோயின் எல்லாம். நாங்கள் அந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளோம் அவ்வளவு தான். ஜி.பி.முத்து ஒரு சின்ன நல்ல கதாபாத்திரம் பண்ணியிருக்கிறார். இருந்தாலும் இந்த 3 நாட்களில் எங்களுடன் எல்லா புரொமோஷன்களுக்கும் வருகிறார்.

ஜி.பி.முத்து அவர்களின் எல்லா கதைகளையும் கேட்டேன். அவர்களுக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர் ஒரு ஆம்பளை சன்னி லியோன். அவர் விரைவில் ஒரு கட்சி தொடங்க உள்ளார், அதற்கு வாழ்த்துகள். சன்னி லியோன் இந்த படத்தில் கடின உழைப்பு கொடுத்துள்ளனர். பண்டைய தமிழைப் பயிற்சி பெற்று நன்றாக டப்பிங் பேசியுள்ளார்” என்றார்.

நடிகை சன்னி லியோன் பேசிய போது, “வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, இயக்குனரின் தமிழ் என் ஆங்கிலம் இரண்டும் நன்றாக மேட்ச் ஆனது. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் கண்டிப்பாகப் பாருங்கள்” என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகை தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து பேசிய நடிகர் சதீஷின் பேச்சு சர்ச்சையான நிலையில், தற்போது இந்த விழாவில் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

இதையும் படிங்க:பொன்னியின் செல்வன் - பாகம் 2: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Last Updated : Dec 29, 2022, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details