சென்னை: நடிகரும், அகில இந்திய சமத்துவ கட்சியின் நிறுவனருமான சரத்குமார் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், சரத்குமார் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார், சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார்கள். பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்து கொண்டு இருக்கிறார். யாரும் எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நடிகர் சரத்குமாருக்கு உடல்நலக்குறைவு.. அறிக்கையில் கூறப்பட்டது என்ன? - நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சிறு மருத்துவ பரிசோதனைக்காக சென்றதாகவும், தற்போது பூரண நலத்துடன் இருப்பதாகவும் அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்