தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தேவையற்ற கேள்வி கேட்க வேண்டாம்.. கடுப்பான சரத்குமார் - செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்த சரத்குமார்

சென்னையில் நடைபெற்ற 'போர் தொழில்' படத்தின் வெற்றி விழாவின்போது நடிகர் சரத்குமார் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Actor Sarathkumar
சரத்குமார்

By

Published : Jul 1, 2023, 8:54 AM IST

'போர் தொழில்' படத்தின் வெற்றி விழாவின் போது நடிகர் சரத்குமார் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதம்

சென்னை: இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'போர் தொழில்' படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, விழா முடிந்த பின்னர் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தயாரிப்பாளர் ஆர்பி சௌத்யியிடம் பேசி உள்ளேன். இப்போதைய இளைஞர்களை சென்றடையுமா என்று தெரியவில்லை. ஆனால் குடும்பப் பாங்கான கதையாக இருக்கும்போது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உழைப்புக்கு எங்கேயும் வெற்றி உண்டு.

ஆளுநர் விவகாரத்தில் எந்த முடிவாக இருந்தாலும் ஆலோசகரிடம் ஆலோசனை செய்து எடுக்க வேண்டும். இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். நிதானமாக சட்ட வல்லுநர்களிடம் பேசிவிட்டு முடிவு எடுத்து இருக்கலாம்” என தெரிவித்தார். தொடர்ந்து, உதயநிதி நடித்த மாமன்னன் படம் குறித்த கேள்விக்கு, 'மாமன்னன்' படம் இன்னும் பார்க்கவில்லை, கண்டிப்பாக பார்க்கிறேன் என்றார்.

மேலும் நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு, ‘யார் வேண்டுமானாலும் வரலாம். அவருடன் நான் கூட்டணியா என்னுடன் அவர் கூட்டணியா என்றால் என்னோடுதானே வைக்க வேண்டும். அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும்” என்றார். அதன்பிறகு தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்விகேட்டபோது கோபம் அடைந்த சரத்குமார், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு மீண்டும் பேசிய அவர், “எனது கட்சி சார்பில் மக்கள் பணி செய்துதான் வருகிறேன். எனது தொழில், சினிமா. தற்போது உள்ள தொழில்நுட்ப உலகில் களத்தில் இறங்கிதான் கருத்து சொல்ல வேண்டும் என்பதில்லை” என்றார். பின் நாட்டாமை 2 பற்றிய கேள்விக்கு, கதைக்களம் அமைய வேண்டும். இப்போது உள்ள ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று பார்க்க வேண்டும் என்றார்.

அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆன்லைன் ரம்மி குறித்த கேள்விக்கு மீண்டும் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது பேசிய சரத்குமார், ‘இது போர் தொழில் படத்தின் வெற்றி விழா. இங்கு தேவையற்ற கேள்விகள் கேட்க வேண்டாம்’ என்று கூறி கோபத்துடன் சென்று விட்டார். தற்போது அவர் செய்தியாளர்களிடம் கோபமாக பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவில் சிங்கக் குட்டியை 6 மாதத்திற்கு தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன்!

ABOUT THE AUTHOR

...view details