சென்னை: இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி நட்பு மற்றும் சமூகம் சார்ந்த திரைப்படங்களை இயக்கியும், நடித்தும் வருபவர். இவர் இயக்கிய நாடோடிகள் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இவர் நாயகனாக நடித்த சாட்டை, அப்பா உள்ளிட்ட படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது சமுத்திரக்கனி, விமானம் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கேகே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சிவபிரசாத் யானலா இயக்கியுள்ள இப்படத்தில் மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், நான் கடவுள் ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல், ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார்.