துணிவுபடம் குறித்து நடிகர் சமுத்திரகனி அளித்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்...
இயக்குநர் வினோத் பற்றி இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரகனி நினைப்பது?: ’இயக்குநர் வினோத் எவ்ளோ சந்தோஷமா இருந்தாலும் சரி, சோகத்துல இருந்தாலும் சரி. அதை வெளியில் காட்டிக் கொள்ளவே மாட்டார். அவருடைய அதிகபட்ச சந்தோஷம். அவருடைய தொடுதலில் தான் தெரியும். நான் ஒரு ஷாட் முடிச்சிட்டு அவர் பக்கதுல உட்கார்ந்தா, நல்லா இருந்தா.... என் கை மேல கை வைப்பார். அதான் அவரோட சந்தோஷம். அது மட்டும் இல்லாமல் வினோத் மிகவும் பொறுமையான மனிதர்.
சக நடிகராவும் இயக்குநராகவும் நடிகர் அஜித் குறித்து உங்கள் கருத்து:பேரன்பான மனிதர். இந்த பிரபஞ்சத்தை அதிகமாக நேசிக்கக் கூடியவர். எங்கேயுமே ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரையும் சமமாக பார்க்கக்கூடிய மனிதர். அவருடைய நல்ல மனதிற்கு தான் அவர் இந்த நிலைமையில் இருக்கிறார்.
துணிவு படத்தில் நீங்க நல்ல போலீஸா..? இல்ல கெட்ட போலீஸா..?நான் நல்ல போலீஸ் தான். எல்லா போலீஸுமே நல்ல போலீஸ் தான், சூழ்நிலை தான் அவங்களை மாத்துது. நான் இந்தப் படத்துல நல்ல போலீஸ் தான்.
ஒரு இயக்குநராக அஜித் ஹீரோவா பார்க்க விருப்பமா? இல்லை வில்லனாக பார்க்க விருப்பமா?:அஜித் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை நன்றாக செய்யக்கூடியவர். அவரை ஹீரோவாக பார்க்கத் தான், நான் விரும்புகிறேன்.