தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நந்தா பெரியசாமி, சமுத்திரக்கனி இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்! - நடிகர் சமுத்திரக்கனி

விமானம் படத்தைத் தொடர்ந்து, நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கின.

samuthirakani
சமுத்திரக்கனி

By

Published : May 12, 2023, 9:42 PM IST

சென்னை: இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி நட்பு மற்றும் சமூகம் சார்ந்த திரைப்படங்களை இயக்கியும், நடித்தும் வருபவர். இவர் இயக்கிய நாடோடிகள் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இவர் நாயகனாக நடித்த சாட்டை, அப்பா உள்ளிட்ட படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமுத்திரக்கனி நடித்துள்ள விமானம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பணிகள், பூஜையுடன் இன்று(மே.12) தொடங்கியுள்ளது. இப்படத்தில் சமுத்திரக்கனியுடன், அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பரபரப்பான திரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, கேரள எல்லையில் மேகமலை, குமுளி, மூணாறு பகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே சமுத்திரக்கனி மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்து முழு ஈடுபாட்டுடன் இப்படத்தில் இறங்கிவிட்டதாக கூறுகின்றனர். மேலும், நாயகி அனன்யா நாடோடிகள் படத்திற்குப் பிறகு சமுத்திரக்கனி படத்தில் நடிக்கிறார்.

'சீதா ராமம்' படப்புகழ் விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சினேகன், இயக்குநர் ராஜூமுருகன் மற்றும் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். மைனா படப்புகழ் ஒளிப்பதிவாளர் சுகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இயக்குனர் நந்தா பெரியசாமி கடைசியாக இயக்கிய 'ஆனந்தம் விளையாடும் வீடு' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது இவர் சமுத்திரக்கனியுடன் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ஒரே வாரத்தில் 5 படங்கள்.. கோடை விடுமுறை விருந்தாகும் ஃபீல் குட் மூவிஸ்!

ABOUT THE AUTHOR

...view details