தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்! - Rajinikanth congratulates Udayanidhi Stalin

நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி ஏழுமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு திருப்பதி கோயிலுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்
நீண்ட வருடங்களுக்கு பிறகு திருப்பதி கோயிலுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்

By

Published : Dec 15, 2022, 11:19 AM IST

Updated : Dec 15, 2022, 11:51 AM IST

திருப்பதி:நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ஆம் தேதி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பிறந்தநாளின் போது சென்னையில் இல்லாத அவர் பெங்களூரூ சென்றார்.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக நேற்று இரவு திருப்பதி சென்ற அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை செயல் அதிகாரி தர்மா ரெட்டி கோயில் மகா துவாரம் முன்பு வரவேற்றார். பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி, வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் வழங்கினர்.

அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய ரஜினிகாந்த், ஆறு வருடங்கள் கழித்து திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற பிறகு தொலைபேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார்.

இதையும் படிங்க: பயத்துக்கே பயம் காட்றவன் : "15 years of Billa" - ரசிகர்கள் கொண்டாட்டம்!

Last Updated : Dec 15, 2022, 11:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details