தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஜார்க்கண்ட் ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு! இமயமலை பயணத்தின் இடையே திடீர் விசிட்! - ரஜினிகாந்த் ஜெய்பீம் ஞானவேல்

தனது இமயமலை பயணத்தை முடித்து கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்ற ரஜினிகாந்த் மாநில தலைநகர் ராஞ்சியில் ஆளுநரை சந்தித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 17, 2023, 12:37 PM IST

Updated : Aug 17, 2023, 2:25 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமயமலை பயணத்திற்கு பிறகு ஜார்க்கண்ட் ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

படம் வெளியான நாள் முதல் தற்போது வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் ரஜினியின் ஸ்டைல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. தற்போது வரை உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஜெயிலர் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் ரஜினிகாந்த் இமயமலை சென்று உள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே அவர் இமயமலை சென்றுவிட்டார். வழக்கமாக தனது பட ரிலீஸ் முன்பு இமயமலை செல்லும் ரஜினிகாந்த், கரோனா தொற்றால் 4 ஆண்டுகளாக பிறகு இமயமலை சென்றுள்ளார்.

அங்கு பல்வேறு கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்த வீடியோக்கள் வெளியாகின. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சிக்கு ரஜினிகாந்த் சென்றார். அங்கு ஆளுநராக இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.

இதனை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த பதிவில் "ராஞ்சி வந்த எனது நண்பரும், மிகப் பெரிய நடிகரும், நல்ல மனிதநேயமிக்கவருமான ரஜினிகாந்தை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ராஞ்சி மண்ணிற்கு நடிகர் ரஜினிகாந்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய சாதனை வெற்றி பெற்றுள்ள நிலையில் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது ஆன்மீக பயணத்தில் ரஜினி பிஸியாக உள்ளார். சென்னை திரும்பியதும் ஜெயிலர் படத்தின் வெற்றியை படக்குழுவினர் உடன் சேர்ந்து ரஜினி கொண்டாட உள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ரஜினி தற்போது அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:Rajinikanth: இமயமலையில் ரஜினிகாந்த் - வெளியான வைரல் வீடியோ..!

Last Updated : Aug 17, 2023, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details