சென்னை: கோமாளி படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே(Love Today). இவரது இயக்கத்தில் குறும்படமாக வெளியான ஆப் லாக் என்ற படத்தை திரைப்படமாக எடுத்திருந்தார். இதில் இவானா, சத்யராஜ், பாரத், கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கடந்த 4ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இது குறித்து பிரதீப் ரங்கநாதன் அவரது ட்விட்டரில், "இதைவிட வேறு என்னால் என்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது. அவ்வளவு நெருப்பு. இறுக்கமான அணைப்பு , அந்த கண்கள் , சிரிப்பு , நடை மற்றும் காதல் . என்ன ஒரு ஆளுமை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'லவ் டூடே' படத்தை பார்த்து பாராட்டினார். உங்களது வார்த்தைகளை மறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சில நெட்டிசன்கள் பிரதீப் ரங்கநாதனுடன், ரஜினிகாந்த் இணைந்து ‘ஜாயிண்ட் ஜெகதீசன்’ என்ற படத்தை இயக்க இருப்பதாக மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் அதிகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:மாமன்னன் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை... - உதயநிதி ஸ்டாலின்