நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ’பீஸ்ட்’. கடந்த வாரம் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனால் நெல்சன் அப்செட்டில் இருப்பதாக கூறப்பட்டது.
நெல்சனை ’கன்பார்ம்’ செய்த ரஜினி : ட்விட்டரில் கவர் படம் மாற்றி குறிப்பால் தகவல் - ரஜினிகாந்த்
தனது அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்பதை ட்விட்டர் கவர் போட்டோ மூலம் நடிகர் ரஜினிகாந்த் உறுதிசெய்துள்ளார்.
![நெல்சனை ’கன்பார்ம்’ செய்த ரஜினி : ட்விட்டரில் கவர் படம் மாற்றி குறிப்பால் தகவல் நெல்சனை ’கன்பார்ம்’ செய்த ரஜினி : ட்விட்டரில் கவர் படம் மாற்றி குறிப்பால் தகவல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15070247-thumbnail-3x2-nelson.jpg)
ஏனெனில் ’பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து அதே சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 169 வது படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால் சமீபத்தில் ’பீஸ்ட்’ படத்தின், விமர்சனங்களுக்கு பிறகு ரஜினியின் முடிவில் மாற்றம் இருப்பதாக இணையத்தில் புரளி கிளம்பியது. இதனால் நெல்சன் இப்படத்தை இயக்குவாரா என சிலர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் நடிகர் ரஜினி தனது ட்விட்டரில் கவர் போட்டோவை மாற்றியுள்ளார். அதில் நெல்சன் இயக்கும் படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்துள்ளார். இதன்மூலம் ரஜினி படத்தை நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளதை ரஜினிகாந்த் குறிப்பால் உணர்த்தியுள்ளார்.