நடிகர் கவின் சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் நடிக்க வந்தவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம், 'லிஃப்ட்'. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து தற்போது அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின் நடித்துள்ள திரைப்படம், டாடா.
இப்படத்தில் அபர்ணா தாஸ், பாக்யராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இளமை துள்ளும் படமாக உருவாகியுள்ள இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. கல்லூரி படிக்கும் நாயகன் மற்றும் நாயகி இருவரும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் ஒருநாள் நாயகி கர்ப்பமாகிறாள். இதனைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை உணர்ச்சி பொங்க சொல்லியுள்ள திரைப்படம், டாடா.
இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் திரையுலகைச் சேர்ந்த பலரும் படத்தைப் பார்த்து பாராட்டி வருகின்றனர். இப்படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் கே.பாபுவுக்கு உடனடியாக அடுத்த படத்தின் வாய்ப்பு கொடுத்துள்ளது, லைகா நிறுவனம்.
இந்த நிலையில் டாடா படத்தை பார்த்த நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் படக்குழுவினரை மிகவும் பாராட்டியுள்ளார். படத்தை பார்த்துவிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகன் டாடா படத்தின் நாயகன் கவின் மற்றும் நாயகி அபர்ணா தாஸ், தயாரிப்பாளர் அம்பேத்குமார், இயக்குநர் கணேஷ் K. பாபு மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த படம் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்குச் சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலா, புகழால் சிக்கிய ரோபோ சங்கர்.. பிகில் - ஏஞ்சலை தூக்கிய வனத்துறை